கொள்ளையர் அட்டூழியம்: வயோதிபப் பெண் வெட்டி கொலை - கணவர் படுகாயம்
வயோதிப தம்பதியரை கொள்ளையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆபத்தான நிலையில் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் எஹெலியகொட - அருபொல, நெடுரண பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தம்பதியினரின் இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் ஒரு மகள் களனி பிரதேசத்தில் இருப்பதாகவும், குறித்த தம்பதியினர் குறித்த வீட்டில் தனியே தங்கியுள்ளதாகவும் கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த கொலையை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த வயோதிப ஆண் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் இறந்திருக்கலாம் என நினைத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்ற போதும், அந்த நபர் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கை கால்கள் கட்டப்பட்ட நிலை
ஜயசிங்க முதியன்சேலாகே சந்திரலதா அய்ரின் என்ற 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரது கணவர் 76 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி வீட்டின் குளியலறைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் வெட்டி கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |