அரச சேவைகள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தம்
அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அரச சேவைகள் ஆணைக்குழுவினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு இதுதொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அரச நிதியை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நிதியமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கான அறிவித்தல்
அத்துடன், குறித்த தீர்மானத்துக்கு அமைய ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம் எனவும் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் அரச சேவைகளில் வெற்றிடங்கள் ஏற்படும் போது நியமனங்களை வழங்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் வெற்றிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
