மட்டக்களப்பில் மைதான காணியை உரிமை கோரிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி : விரட்டியடித்த மக்கள்

Sri Lanka Police Tamils Batticaloa
By Bavan Nov 10, 2026 02:02 PM GMT
Report

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றின் ஒரு பகுதி காணி தனது என வேலி நாட்டுவதில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை வேலி நாட்டவிடாது அவரை மக்கள் விரட்டியடித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம் பெற்றுள்ளதையடுத்தது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் வீதி ஓரத்தில் அமைந்திருக்கும் தனியாருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வெற்றுக் காணி ஒன்றில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக யாரும் உரிமை கோராத நிலையில் அந்த பகுதி இளைஞர்கள் அதனை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி அதில் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணியை கையகப்படுத்த வேலி நாட்ட முயற்சி

இந்த நிலையில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற அவர் குறித்த விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியான 14 பேச் காணியை காணி உரிமையாளரிடம் இருந்து விலைக்கு வாங்கியதாக தெரிவித்து காணியை கையகப்படுத்த வேலி நாட்டுவதற்கு கட்டைகள் கொண்டுவந்து வேலி நாட்ட முயன்றவேளை அந்த பிரதேச பொது மக்கள் ஒன்று திரண்டு வேலி நாட்ட விடாது தடுத்தனர்.

மட்டக்களப்பில் மைதான காணியை உரிமை கோரிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி : விரட்டியடித்த மக்கள் | Retired Police Officer Lays Claim To Grounds Batti

இதையடுத்து அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் பிரதேச மக்கள் இது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக விளையாட்டு மைதானமாக இளைஞர்கள் பாவித்து விளையாடி வருவதுடன் இந்த காணியை யாரும் உரிமை கோரி வரவில்லை எனவும் இதற்கு இந்த காவல்துறை அதிகாரி போலி ஆவணங்களை தயாரித்து மோசடியாக இந்த காணியை வாங்கியதாக கையகப்படுத்த காவல்துறையின் அனுசரணையுடன் செயற்படுகின்றார்.

திருகோணமலையில் பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவன்: எச்சரித்த ஆசிரியர் மீது கொடூர தாக்குதல்

திருகோணமலையில் பரீட்சைக்கு தாமதமாக வந்த மாணவன்: எச்சரித்த ஆசிரியர் மீது கொடூர தாக்குதல்

விளையாட்டு கழகத்திற்கு கடிதம் கொடுத்த பிரதேச செயலாளர்

இந்த காணியை மைதானமாக பாவிப்பதற்கு பிரதேச செயலாளர் விளையாட்டு கழகத்திற்கு கடிதம் தந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்தறை அதிகாரி இந்த காணியை யாரிடம் வாங்கியது அவரின் பெயரை கூறுமாறு கேட்டால் அதை அவர் சொல்ல மறுத்து வருவதுடன் தனது (புத்தா) புதல்வனின் காணி என்கிறார்.

மட்டக்களப்பில் மைதான காணியை உரிமை கோரிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி : விரட்டியடித்த மக்கள் | Retired Police Officer Lays Claim To Grounds Batti

இது மட்டுமல்ல கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இவர் இந்த காணியை கையகப்படுத்த முற்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் இவருக்கு எதிராக பிரதேச வாசிகள் முறைப்பாடு செய்தனர்.

கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம்

கிளிநொச்சியில் அத்துமீறலுக்கு உள்ளாகிய யுவதி: 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் அடையாளம்

விரட்டியடித்த பொதுமக்கள்

இவ்வாறான நிலையில் மீண்டும் இந்த காணியை கையகப்படுத்த இவர் எத்தனிக்கிறார் எனவே பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இவர் காணியை கையகப்படுத்த முயற்சிப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பிரதேச வாசிகள் தெரிவித்து அவரை வேலி நாட்டவிடாது அவர் கொண்டுவந்து பறித்த மரக் கட்டைகளை தூக்கி அவரது வாகனத்தில் ஏற்றி விரட்டியடித்தனர்.

மட்டக்களப்பில் மைதான காணியை உரிமை கோரிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி : விரட்டியடித்த மக்கள் | Retired Police Officer Lays Claim To Grounds Batti

இதேவேளை குறித்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இது தனியார் காணி தன்னிடம் இதற்கான பட வரைவு. உறுதி உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதாகவும் பிரதேச செயலாளர் இது தனியார் காணி என எழுத்து மூலமான கடிதம் தந்துள்ளதாகவும் அதன் பிரதிகள் கிராம உத்தியோகத்தரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகள்! கஸ்ஸப்ப குழுவை கடுமையாக சாடும் சத்தாரதன தேரர்

மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகள்! கஸ்ஸப்ப குழுவை கடுமையாக சாடும் சத்தாரதன தேரர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023