மரம் விழுந்ததில் ஓய்வு பெற்ற தபால் அதிபர் மரணம்
தம்புள்ளை - சிசிரவத்தை பகுதியில் ஓய்வு பெற்ற தபால் அதிபர் ஒருவர் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் தம்புள்ளை சிசிரவத்தை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரின் விசாரணை
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில், தம்புள்ளை, அத்துபாராய பகுதியில் உயிரிழந்த நபருடைய நண்பரின் தோட்டத்தில் உள்ள மரமொன்றை வெட்டுவதற்காக பலர் ஒன்று கூடியுள்ளனர்.
இதன்போது, ஐம்பது அடிக்கு மேல் உயரமுள்ள குறித்த மரத்தை கயிற்றை கட்டி கீழே வீழ்த்த முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், மரத்தின் கீழே நின்ற ஓய்வு பெற்ற தபால் அதிபர் மீது மரம் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் பின்னர், அயலவர்கள் இவரை தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |