உறவினர் வீட்டுக்கு சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Accident
Death
By Sumithiran
பதுளை ஜயசெகெதர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 13 அடி ஆழமுள்ள மதகுக்குள் விழுந்ததில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதுளை மெதபாறை ஒலியமண்டிய பகுதியைச் சேர்ந்த ஜே.எம்.சந்திரவதி (59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திடீரென கவிழ்ந்தது முச்சக்கரவண்டி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், பதுளையிலிருந்து கிரிஓருவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது, வீதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் முச்சக்கரவண்டி திடீரென பின்னோக்கி கவிழ்ந்து விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்