அரசியல்வாதிகளுக்கு 60 வயதில் ஓய்வு, இளையவர் முன்னிற்பதே நாட்டிற்கு பலம் - ஜீ.எல்.பீரிஸ்
அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றால் அதற்கு இடமளிக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்றுவதில் தவறில்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஞ்சுந்த ஜனதா சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உலகின் எந்த அரசியலமைப்பிலும் தனக்கு தெரிந்த வரையில் இப்படியொரு சரத்து இதுவரை இல்லை.
முக்கியப் பதவி
யார் செய்தாலும் அது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருந்தால் அதை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.
இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான திறன்கள் உள்ளன, அவர்களை வழிநடத்த வேண்டும் என்பது போராட்டத்தின் போது தெளிவாகத் தெரிகிறது.
அப்படியிருந்தும், எந்தப் பின்னணியும் அனுபவமும் இல்லாதவர்கள் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டதன் பெரும் வெற்றியை நாடு அனுபவித்துள்ளது.
பேச்சுவார்த்தை
எனவே இளம் ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்கள் முன்னணியில் இருப்பதே பலம் என்று நினைக்கும் ஒரு பிரிவு நாட்டில் இருக்கின்றது.
மேலும், அமைச்சகங்கள் அது பற்றி ஒரு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது.”என தெரிவித்திருந்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

