காவியுடையுடன் மீண்டும் நீதிமன்றத்திற்கு: ஞானசார தேரர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைக்கு காவியுடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தை புத்தசாசன விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
புத்தசாசன அலுவல்கள் ஆணையாளர்
சட்ட நடவடிக்கைகளின் போது மத அடையாளத்தைப் பேணுவதற்கான முறையான நடைமுறைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன என மேலும் அவர் கூறியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ஞானசார தேரரை காவியுடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய பொருத்தமான நடைமுறைகள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, புத்தசாசன அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த கடிதம், ஞானசார தேரர் சார்ந்துள்ள பீடத்தின் மகாநாயக்க தேரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |