ஒற்றுமையின் பெயரில் பகடையாடப்படும் தமிழ் மக்கள்: மீண்டும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் இன்று வரையில் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த சவால்களை தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்ளும் விதமானது மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது.
எனினும், இவர்களின் ஆட்சியிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் வழங்கப்படவில்லை என்பது ஒரு குறையாகவே இருந்து வருகிறது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு வடக்கு மற்றும் கிழக்கை பிரநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசிய்வாதிகளின் ஒற்றுமையின்மையும் ஒரு காரணம் என தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையே மீண்டும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.........
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |