புத்தாண்டு விடுமுறை: நெடுஞ்சாலைகள் மூலம் வந்து குவிந்த எதிர்பாராத வருமானம்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அதன் போது, இந்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான 06 நாட்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 235 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன அனுமதி
அத்தோடு கடந்த 13 ஆம் திகதி மாத்திரம் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், சாரதிகள் வாகனத்தை சரிபார்த்து நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்துவதற்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே நெடுஞ்சாலைகளுக்குள் செல்ல அனுமதியும் வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |