20 வீதத்தினால் குறையவடையப்போகும் மின் கட்டணம்!
CEB
Sri Lanka
Sri Lankan Peoples
Public Utilities Commission of Sri Lanka
By Shadhu Shanker
இலங்கையில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்ய இலங்கை மின்சாரசபை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய மின்சாரக் கட்டணத்தை சுமார் 20 வீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை யோசனை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாளையதினம் (22) இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்
மின்சாரக் கட்டணங்களை குறைப்பது குறித்து கடந்த 15ம் திகதி பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறிந்து கொள்ளப்பட்டதன் பின்னர், மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பிலான யோசனையை முன்வைக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி