யாழில் இன்று நடந்த கோர விபத்து! பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவன்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Jaffna
                
                                                
                    University of Jaffna
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவு மாணவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா்.
மானிப்பாய் - பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா்.
விபத்தில் காயமடைந்த மாணவன்
இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.
சம்பவம் தொடா்பாக கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்