முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இரத்து : அநுர அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள், சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
பத்தேகமவில் (Baddegama) நேற்று (27) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது, கவனித்துக்கொள்வது மக்களின் வேலையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள்
இந்த நிலையில், சுற்று நிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேட சலுகைகள் சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அந்த சுற்றுநிரூபங்களில் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலின்போது பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அநுர தரப்பினர் உறுதியளித்திருந்த நிலையில் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |