யாழில் படகு விபத்தில் சிக்கியவர்களுக்கு குருதி தேவை...! அவசர கோரிக்கை
யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பிலிருந்து பாலைதீவு நோக்கிப் பயணித்த படகொன்று கவிழ்ந்து இன்று (06.03.2026) விபத்துக்குள்ளாகியது.
இதில், 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரமாகக் குருதித் தேவை (Blood Urgently Needed) ஏற்பட்டுள்ளது.
குருதி வங்கிப் பிரிவு
காயமடைந்தவர்களின் உயிரைக் காக்கப் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு உடனடியாக எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, குருதி வழங்க விரும்பும் கொடையாளர்கள் மற்றும் இளைஞர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவை (Blood Bank) நாடுமாறு அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் மனிதாபிமான அடிப்படையில் முன்வந்து குருதி வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |