சம்பா அரிசிக்கான விலையை அறிவித்த அமைச்சர்
sri lanka
price
rice
Increase
samba rice
By Thavathevan
ஒரு கிலோ சம்பா அரிசியை 128 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த ஆண்டின் இறுதிவரை நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த விற்பனை இடம்பெறும். அத்துடன், நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ 105 ரூபா வீதம் விற்பனை செய்யப்படும்.
பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாகவும் சம்பா, நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி வகைகள் சதொச விலையிலேயே விநியோகிக்கப்படும்.
அரிசி விலை அதிகரித்துள்ள போதிலும், இந்த ஆண்டின் இறுதி வரை, சதொச ஊடாக குறித்த விலைகளுக்கு உட்பட்டதாக மூன்று வகை அரிசிகளையும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி