இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி : வெளியான தகவல்
இலங்கைக்கு இன்று (29) காலை வரை 75,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள (Sri Lanka Customs) தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும், 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட காலத்தை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
அரிசி இறக்குமதி
இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி காலை வரை 72,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விரைவாக விடுவிக்க உணவுப் பரிசோதகர்கள் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சுங்கத்துறை விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அதன் மேலதிக பணிப்பாளரும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட (Seevali Arukgoda) தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |