உலக செல்வந்தர் பட்டியலில் 'கௌதம் அதானி' முன்னகர்வு
உலகின் மூன்றாவது செல்வந்தர்
உலகின் மூன்றாவது செல்வந்தராக கௌதம் அதானி உருவாகியுள்ளதாக புளூம்பெர்க் அறிவித்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கும் அதானியின் மதிப்பு தற்போது சுமார் 137 பில்லியன் டொலராக அதிகரித்திருப்பதால் அவர் பிரான்சின் செல்வந்தரான பேனாட் ஆனோல்டை பின்னுக்குத்தள்ளி மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளார்.
இலங்கையின் வடபகுதி உட்பட்ட பகுதிகளில் சக்தி வளத்துறையில் கால்பதித்துள்ள அதானி குழுமத்தின் சொந்தக்காரராக அதானி இப்போது உலகின் முதலாவது செல்வந்தரான ரெஸ்லா (TSLA) வின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எலோன் மஸ்க், இரண்டாவது செல்வந்தரான அமேசான் நிறுவன நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது செல்வந்தராக உருவாகியுள்ளார்.
கொரோனா காலத்திலும் உயர்ந்த செல்வம்
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் துறைமுகங்கள் சூரிய ஆற்றல் மற்றும் நிலக்கரி உட்பட்ட தொழிற்துறைகளில் கோலோச்சிக்கொள்கிறது. அதானி குழுமத்தின் செல்வம் கொரோனா தொற்றுக்காலத்தின் போதும் உயர்ந்தது.
குறிப்பாக நிலக்கரி பயன்பாடு சார்ந்த தொழிற்துறையில் இன்னும் செல்வத்தை திரட்டிய அவர் ஆசியப் பிராந்தியத்தின் முதலாவது செல்வந்தாரக இருந்த முகேஷ் அம்பானியை கடந்த பெப்ரவரி மாதத்தில் பின்னுக்குத் தள்ளி, முதலாவது இடத்துக்கு உயர்ந்தார்.
கடந்த வாரம், இந்தியாவின் செல்வாக்கு மிக்க தொலைக்காட்சி ஒன்றை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளின் மூலம் அலைகளை உருவாக்கிய நிலையில், அதானி இப்போது உலகின் மூன்றாவது செல்வந்தராக பதிவாகியுள்ளார்.
