உலகின் பணக்கார அரசியல்வாதியாக புடின் : மலைக்கவைக்கும் சொத்து மதிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலகின் பணக்கார அரசியல்வாதியாக உள்ளதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளத்தின்படி, அவரது சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள வீடு மற்றும் 716 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள விமானம் உட்பட சொத்துகள் அவரிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாப்பாட்டு அறையில் உள்ள பொருட்களின் மதிப்பு மட்டும்
அவரின் வீட்டு சாப்பாட்டு அறையில் உள்ள பொருட்களின் மதிப்பு மட்டும் 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் என்று இணையதளம் குறிப்பிடுகிறது.
அவருக்கு 700 கார்கள், 58 இலகுரக விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள், 19 வீடுகள் இருப்பதாகவும் இணையதளம் தெரிவித்துள்ளது.அதிபர் புடினின் சொத்து மதிப்பு மட்டும் 716 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவரிடம் உள்ள விமானம் பறக்கும் கிரெம்ளின் என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல்
அதிபர் புடினின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என பதிவு செய்யப்பட்டாலும், உண்மையில் 200 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் குறிப்பிடுகிறது.
ஆனால், அவர் எப்படி இவ்வளவு சம்பாதித்தார் என்பது மர்மமாக உள்ளது என்றும் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |