தமிழர்களுக்கான உரிமைகள் நிச்சயம் கிடைக்கும் - துணைத் தூதர் திட்டவட்டம்
tamil
rights
D. Venkadesvaran
By Vanan
இலங்கை தமிழர்களுக்கான அரசியல் ஜனநாயக உரிமைகள் நிச்சயம் கிடைக்கும் என இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர் டி. வெங்கடேஸ்வரன் (D. Venkadesvaran) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழினத்திற்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
தமிழர்களுக்கான அரசியல் ஜனநாயக உரிமைகளும் நிச்சயம் கிடைக்கும். ஐ.நா. பொதுச்செயலாளரை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சந்தித்தபோது கூட, தமிழர்களுக்கான உரிமைகள் குறித்து உறுதி செய்திருக்கிறார்.
விரைவில் மாகாணத் தேர்தலும் நடக்கும்” என அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி