சீரற்ற காலநிலை..! மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு
ரிமால் புயல் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் பாதிப்படைந்து மீன்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வறட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்தொழிலில் ஈடுபட முடியாமையினால் தற்போது காணப்படும் மீன்களின் விலை அதிகரித்துள்ளதுடன்,மீன்கள் இன்மையால் சந்தைகளும் முடிய நிலையில் காணப்படுகிறது.
மீன்களின் விலை
ஒரு கிலோ விளைமீன் 1600 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 2400 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1800 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 1700 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 2500 ரூபாயாகவும் வளையா மீன் 1500 ரூபா ஆகவும் நண்டு ஒரு கிலோ 1600 ரூபா ஆகவும் தற்போது கடற்றொழிலாளர்கள் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் மீன்ளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு கல்முனை சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |