பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு)

France Paris
By Sumithiran Jun 30, 2023 07:04 AM GMT
Report

புதிய இணைப்பு 

பிரான்ஸில் மூன்றாவது நாளாக நேற்று வியாழக்கிழமை இரவு மீண்டும் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.

வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காவற்துறை அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயதான நாஹெல் என்ற இளைஞன் மரணமடைந்ததை அடுத்து இந்த வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி வர்த்தக நிலையங்கள் சூறையாடப்படுவதுடன் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் 40,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இளைஞரை சுட்டுக் கொலை செய்த காவல்துறை அதிகாரி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

எனினும் வன்முறைகள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில் பிரான்ஸ் அதிபர் அவச கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாம் இணைப்பு 

பிரான்ஸில் வெடித்த கலவரத்தை அடுத்து நாடு முழுவதும் குறைந்தது 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று Le Figaro செய்தி வெளியிட்டுள்ளது.

அவற்றில் 242 சுற்றிவளைப்பு பாரிஸ் பிராந்தியத்தில் நடந்ததாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆபிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அமைதியை நிலைநாட்ட சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் மக்ரோன், "இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் காவல்துறையினர் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர்.

பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்த சம்பவம்

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

பின்னர் காரில் இருந்த ஆபிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார். இது பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாரிஸ் இன ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இங்கே பல்வேறு இனத்தவர், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

கார்கள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரை

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

வடக்கு நகரான லில்லி, டோலூஸ், தென்மேற்கு நகரங்களான அமியன்ஸ், டிஜோன், எஸ்ஸோன் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். குப்பைத் தொட்டிகளுக்குத் தீவைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். எஸ்ஸோன் பகுதியில் பேருந்து ஒன்றை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அதற்கு தீ வைத்தனர். இன்னும் சில பகுதிகளில் கார்கள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

தெளிவான சட்டவிதிமீறல்

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட காவலரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர், "நடந்த சம்பவம் சிசிடிவி கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது. இது தெளிவான சட்ட மீறல்" என்று கூறியுள்ளார்

. முன்னதாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிரதமர் எலிசபெத் போர்ன் கூறுகையில், "இது தெளிவான சட்டவிதிமீறல்" என்றார்.

தாயாரின் வேண்டுகோள்

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

இதற்கிடையில் சிறுவனின் தாய் டிக்டொக் சமூக வலைத்தளம் மூலமாக பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் ஏற்பாடு செய்துள்ள நினைவஞ்சலிப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, வவுனியா, Montreal, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024