சீனி, சமையல் எரிவாயு மற்றும் பால்மாவைத் தொடர்ந்து மற்றுமொரு பொருளுக்கு ஏற்பட்டுள்ள விலையேற்றம்
சீனி, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் தொடர்பில் பேசப்பட்டுவரும் நிலையில், சீமெந்து மூடையொன்றின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த செய்தியில்,
இதற்கமைய, ஒரு மூடை சீமெந்து 950 ரூபா முதல், 1,005 ரூபா வரையில் சந்தையில் முன்னதாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சீமெந்தின் விலை 1,100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீமெந்தின் விலையினை அதிகரிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது அதிகார சபையினால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.