சடுதியாக உயர்ந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
Srilanka
Corona
Recovered
Deaths
Infections
By MKkamshan
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,286 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 643,072 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314 பேராக அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608,226 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,142ஆக அதிகரித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்