கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!
Srilanka
Corona
Death
recover
Completely healed
Infected people
By MKkamshan
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,544 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 614,659அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
