ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

Mannar Ranil Wickremesinghe Risad Badhiutheen Sajith Premadasa Election
By Shadhu Shanker Aug 20, 2024 07:51 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இந்த நாட்டிலே அநியாயம் செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த, எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் கை கோர்த்துள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்(Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

மன்னார்(Mannar) முசலியில் நேற்று (19) மாலை இடம் பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்(Ranil Wickremesinghe) எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது.

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதி வேட்பாளர் 

ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற, கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரித்த எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கை கோர்த்து உள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம் | Rishad Rejects Support For Ranil Due To Allies

இதனாலேயே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆதரவு தெரிவித்த நிலையில் முதல் முதலாக இக்கிராமத்திற்கு வருகை தந்து பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் ஏமாந்து விடாது புத்தி சாதுரியமாக எமது வாக்குகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இக் காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நோய்: விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நோய்: விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இனவாதம் 

ஜனாதிபதி தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. அவர்களின் நாங்கள் மூன்று வேட்பாளர்களை நிராகரித்து விட்டு, ஒருவரை மாத்திரம் ஏன் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்கலாம்.

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம் | Rishad Rejects Support For Ranil Due To Allies

இந்த நாட்டிலே எதிர் காலத்தில் இனவாதம் இருக்க கூடாது என்று ஆசைப்படுகிறோம். ஜனாஸாக்களை எரிக்கின்ற கேடு கெட்ட ஜனாதிபதி இந்த நாட்டிலே மீண்டும் வந்து விடக் கூடாது என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.

இவ்வாறு ஜனாஸாக்களை எரிகின்ற போது கைகட்டி பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், அமைச்சரவையில் இருந்தவர்கள்,அதற்கு பக்கபலமாக இருந்தவர்கள்,144 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தை வென்ற ஜனாதிபதி கோட்டபாயவிற்கு 20 ஆவது திருத்தச் சட்டத்தை வெள்ளச் செய்வதற்காக எமது சமூகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல்

ரணில் விக்ரமசிங்க

எமது சமூகத்தை அழிக்க கை உயர்த்திய அந்த கூட்டம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். இந்த நாட்டிலே ஒரு காலத்தில் ஆயுத கலாச்சாரத்தை தூது விட்டவர்கள்,தற்போது ஜனநாயகத்தை பேசுகின்றவர்கள், அவர்கள் இன்று எந்த மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை.

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம் | Rishad Rejects Support For Ranil Due To Allies

அவர்கள் நாஸ்திக கொள்கையைக் கொண்டவர்கள். இவ்வாறானவர்கள் உடன் இணைந்து நாங்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கொடுக்க முடியுமா?, என்று சிந்திக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவரை பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே இருக்கிறது.

ஆனால் அவருடன் சேர்ந்து இருக்கிற கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கிற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரித்த எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கோர்த்துள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

இதனாலேயே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது என்று ஏமாந்து விடாதீர்கள்.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

சஜித் பிரேமதாச

அரசாங்கம் என்பது மக்களின் பணம்.அரசாங்கத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்களோ அவர்களினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம் | Rishad Rejects Support For Ranil Due To Allies

எனவே இந்த நாட்டிலே மீண்டும் ஒரு முறை இனவாதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். நான் மட்டுமல்ல சிறுபான்மை தலைவர்களும் சஜித் பிரேமதாசவுடன் கைகோர்த்துள்ளனர்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடிய சட்ட வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். இனவாதத்திற்கு எதிரான சமூக பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள்.கரைபடியாத உள்ளங்கள் பலர் இருக்கின்ற அணியாகவே சஜித் பிரேமதாச அணி இருக்கின்றன.

சிறுபான்மை மக்கள்

அந்த அணியை பலப்படுத்துகின்ற கடமை தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் இருக்கின்றது.

ரணிலை இதனால் தான் ஆதரிக்கவில்லை! ரிஷாட் பதியுதீன் விளக்கம் | Rishad Rejects Support For Ranil Due To Allies

இந்த மூன்று சமூகத்தின் வாக்கும் மிகவும் பெறுமதியான வாக்குகளாகவே இருக்கின்றது. எனவே சஜித் பிரேமதாசவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளும் அமோக வெற்றிக்கு வழிவகுக்கும்.

எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் முடிவு வருகின்ற போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார்.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம். எனவே அனைவரும் உங்கள் வாக்குகளை சீரழிக்காமல் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள்”என அவர் மேலும் தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024