ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் பெர்சியன் வளைகுடா நீரிணை அதிகாரசபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, ஈரான் விதித்துள்ள வழிமுறை கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவை பறிமுதல் மற்றும் சிறைபிடிக்கப்படலாம் என எக்ஸ் தளத்தில் PGSA வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிமீறல் பட்டியல்
மேலும், இத்தகைய தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய கப்பல்களும் விதிமீறல் பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நிறுவனங்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள் தங்களது பெயர்களை இந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமாயின் உரிய ஆவணங்களுடன் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், சிரமங்களைத் தவிர்க்க தமது இணையதளத்தில் உள்ள பட்டியலைச் சரிபார்த்து இதுபோன்ற கப்பல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |