புதிய கட்டத்திற்குள் செல்லும் ஈரானுடனான போர்! அமெரிக்க தரப்பு எடுத்துரைப்பு
ஈரானுடனான போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, “நாம் மிக விரைவில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையப் போகிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த கட்டத்தில் நமது நட்பு நாடுகள் உதவும் என்றும், இதை நாம் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
ஈரானின் அணு ஆயுத முயற்சி
இதேவேளை, முந்தைய அனைத்து நிர்வாகங்களின் முக்கிய இலக்காக இருந்த, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளதாகவும் மைக் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் பாம்பின் தலையை வெட்டிவிட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். பேச்சுவார்த்தை மேசையின் மறுபுறத்தில் இருக்கும் ஈரானியர்களை நம்ப முடியாது என்பதுதான் இங்குள்ள மிகப்பெரிய சவாலாகும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |