கொழும்பு - பொரளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு
கொழும்பு பொரளையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் மீது கைக்குண்டுத் வீச்சு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையில் வசிக்கும் ரன்சிலு என்பவரின் வீட்டின் மீதே கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரன்சிலு என அழைக்கப்படும் நபர், தற்போது துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான வானாத்தே சத்து என்பவரின் நெருங்கிய சகாவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீசப்பட்ட கைக்குண்டு
எனினும், வீட்டின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இந்தக் கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |