எல் நினோ தாக்கத்துக்கு முன்னரே இலங்கையில் தீவிரமடையும் வறட்சி நிலை

Sri Lanka Weather Water
By Dharu Aug 23, 2026 06:51 AM GMT
Report

எல் நினோ குறித்த எச்சரிக்கை இலங்கையில் தீவிரமடைவதற்கு முன்பே பல கிராமங்களில் வறட்சி நிலை பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் உள்ள வில்கமுவ லடியங்கல பிரதேச மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கிணறுகளிலும் ஏரிகளிலும் சிறிதளவும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்னீர் மீன்பிடித்தல் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த மக்களே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : முதலிடத்தில் பொலன்னறுவை

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : முதலிடத்தில் பொலன்னறுவை

நெடுந்தீவு கடற்படை

இந்நிலையில் அவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக சிறிதளவு தண்ணீரைக் கண்டறிய ஐந்து கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து செல்லும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எல் நினோ தாக்கத்துக்கு முன்னரே இலங்கையில் தீவிரமடையும் வறட்சி நிலை | Drought In Sri Lanka To Intensify Ahead Of El Nino

மேலும் யாழ். நெடுந்தீவு பகுதியிலும் வறட்சி நிலைமை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் வெப்ப தாகத்தால் வாடும் காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக, நெடுந்தீவு  கடற்படை வீரர்கள் ஒரு தொட்டியில் தண்ணீரை இறைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

75 ஆண்டுகளில் இல்லாத எல்நினோ அபாயம் - குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை

75 ஆண்டுகளில் இல்லாத எல்நினோ அபாயம் - குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை

இலங்கை சந்திக்கவுள்ள எல் நினோ

சுமார் 75 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் கடுமையான எல் நினோ நிகழ்வை இலங்கை சந்தித்து வருவதாகவும், இது உடனடி தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நீடித்த வறண்ட நிலைமைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும், அதே நேரத்தில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எல் நினோ தாக்கத்துக்கு முன்னரே இலங்கையில் தீவிரமடையும் வறட்சி நிலை | Drought In Sri Lanka To Intensify Ahead Of El Nino

இந்த விடயம் எல் நினோவின் தாக்கங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பல மாவட்டங்கள் ஏற்கனவே குடிநீர் மற்றும் நீர்பாசன விநியோகத்தில் சிரமங்களைச் சந்தித்து வருகிவதாகவும் இருப்பினும் இதன் பாதிப்புகள் முழு மாவட்டங்களையும் பாதிக்காமல், குறிப்பிட்ட பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் தற்போது அம்பாறை, மொனராகலை, மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை மற்றும் மாத்தளை ஆகியவை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எல் நினோவால் வடக்கிற்கு ஆபத்து..! எச்சரிக்கும் யாழ். பல்கலை பேராசிரியர் பிரதீபராஜா

எல் நினோவால் வடக்கிற்கு ஆபத்து..! எச்சரிக்கும் யாழ். பல்கலை பேராசிரியர் பிரதீபராஜா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016