ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தடை - கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
Anura Kumara Dissanayaka
Sri Lanka Magistrate Court
Law and Order
By Pavi
ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நபர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றின் அதிரடி உத்தரவு
அதிஉயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் எனப் காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி