மற்றுமொரு பெண்ணையும் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய ரிஷாத்தின் மைத்துனர் - வெளிவரும் அதிர்ச்சி தகவல்
woman
abuse
richard bathiudeen
brother in law
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப்பெண்ணையும்,ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி உள்ளமை தெரியவந்துள்ளது.
ரிஷாட்டின் இல்லத்தில் பணியாளாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி இஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்திருப்பதாக, சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
இதனை அடுத்து பொலிஸ் குழு ஒன்று இன்று ரிஷாட்டின் இல்லத்துக்கு மீண்டும் சென்று வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி