பாலஸ்தீன மக்களுக்கு நிதியுதவியை அறிவித்த பிரித்தானிய பிரதமர்
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு இந்திய மதிப்பு 101.4 கோடி ரூபாய் நிதியுதவியை பிரித்தானியா வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது 11 நாட்களாக தொடர்ந்துள்ள நிலையில் இதுவரை பாலஸ்தீனியர்கள் 2,215 பேர் பலியாகியுள்ளதுடன் 8,714 படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் அவதிக்குள்ளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு பல நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர்.
10 மில்லியன் டொலர்
இந்நிலையில் பலஸ்தீன மக்களுக்கு பிரித்தானியா 10 மில்லியன் டொலர் தொகையை வழங்க இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில், ''ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன மக்களையோ அல்லது அவர்கள் விரும்பும் எதிர்காலத்தையோ பிரதிபலிக்கவில்லை.
Hamas does not represent the Palestinian people or the future they want.
— Rishi Sunak (@RishiSunak) October 16, 2023
Palestinians are victims of Hamas too.
Today I’m announcing an increase in our aid to Palestinian civilians by a third, with an additional £10 million of support.
ஹமாஸ் அமைப்பினரால் பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று கூடுதலான 10 மில்லியன் டொலர் ஆதரவுடன் பாலஸ்தீனிய மக்களுக்கான பிரித்தானியாவின் உதவியை மூன்றில் ஒரு பங்காக அதிகரிப்பதாக அறிவிக்கிறேன்'' என ரிஷி சுனக் பதிவிட்டுள்ளார்.