உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு விசேட குழு : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை
இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஆவணத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றாச்சாட்டுக்களை விசாரிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
தாக்குதலுக்குப் பின் பெரிய சதி
இந்த பிரேரணையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள சதிக்கு குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடன் சில அரசியல்வாதிகள் மற்றும் மூத்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பதாகவும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆகையினால் இந்தவிடயத்தில் விசாரணைகளை நடத்துவது முக்கியமானதென இந்தப் பிரேரணையை கொண்டுவரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.