உயர்வடைகின்றது மற்றுமொரு போக்குவரத்து துறையின் கட்டணம்
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து தொடருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு லீட்டர் டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரித்துள்ளமையினால், தொடருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பேருந்து கட்டணத்தை விடவும் ஆகக் குறைவான கட்டண அறவீடுகளுக்கு அமையவே, தொடருந்து போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொடருந்து கட்டணத்தை அதிகரிக்கும் விதம் குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை.
தொடருந்து திணைக்களம் நஷ்டத்திலேயே இயங்கி வருகின்றமையினால், இந்த சந்தர்ப்பத்தில் தொடருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்