சங்கிற்கு பெருகும் ஆதரவால் பொறாமைப்படும் தென்னிலங்கையின் கைகூலிகள்!
சங்கு சின்னத்தில் போட்டியிடும் எங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதைக் கண்டு பொறாமைப்படும் தென்னிலங்கையின் கைகூலிகள் அந்த சின்னத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேன் குருசாமி (Suren Guruswamy) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழர்களுக்கான மாற்றம் இல்லை.
தென்னிலங்கைக்கு தமிழ்தேசியம் பேசிக்கொண்டு தங்களுடைய கட்சியை விலைபேசி அடகு வைத்தவர்கள் சங்கு சின்னத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சங்குசின்னத்திற்கு எதிராக நின்றவர்கள் இன்று நாங்கள் சங்கை திருடிவிட்டோம் என புலம்புவது அவர்களின் அச்சத்தை வெளிப்படுத்துகின்றது.
பொதுச்சபை போதுத்தேர்தலில் பங்குபற்றவில்லை என்று கூறியவுடன் சங்கு சின்னம் எங்கள் வசமானது.
சங்கு சின்னம் என்பது தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வாக்களிக்கப்பட்டு தமிழர்களின் குறியீடாக உள்ள சின்னமாகும்.” என குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |