கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் தொழிலற்றோர் வீதம்

Batticaloa Sri Lanka
By Beulah Aug 13, 2023 11:45 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழுக் கிழக்கு மாகாணத்திலும் தொழிலற்றோர் வீதம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது.

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மாவட்ட செயலக தொழில் நிலையம் அக்ஷன் யுனிற்றி லங்கா ஆகியவை இணைந்து மாவட்டத்தின் மாபெரும் தொழில் கல்விச் சந்தை சனிக்கிழமை (12.08.2023) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றது.

மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 30 இற்கு மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வழங்கும் நிறுவனங்கள், அரச தனியார்துறை தொழிற் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டன.

சுமார் 1000 ற்கு மேற்பட்ட உடனடித் தொழில் வாய்ப்புக்களோடு இந்நிறுவனங்கள் இந்த தொழிற் சந்தையில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தனியார் தொழில் துறை

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் தொழிலற்றோர் வீதம் | Rising Unemployment Rate In Eastern Province Sl

தொழில் கல்விச் சந்தையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா இதுதொடர்பில் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு 4 வீதமாக இருந்த தொழிலற்றோர் விகிதம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 7.2 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மொத்த தொழிலற்றோர் வீதம் 22 ஆக உள்ளது. உயர்தரக் கல்வியை முடித்தவர்கள், பல்கலைக்கழகம் செல்லாத ஒரு தரப்பினர், சாதாரண தரத்தில் விடுபடுகின்ற தரப்பினர், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் இவ்வாறு பலதரப்பட்டவர்கள் வேலையற்று இருக்கிறார்கள்.

அரசாங்க உத்தியோகங்களை விட தனியார் தொழில் துறைகளில் அதிக வேலைவாய்ப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

தனியார் தொழில் துறையின் மூலம்தான் உண்மையான பொருளாதார அபிவிருத்தி அடைந்து கொள்ள முடியும்.

எனவே, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எல்லேருரம் சிந்திக்க வேண்டும்” என்றார்.

நிகழ்வில் மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், நிகழ்வை இணைப்பாக்கம் செய்து அனுசரணை வழங்கிய அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் வி. சுதர்ஷன், நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன், மாவட்ட சமூக சேவை அலுவலர் சந்திரகலா கோணேஸ்வரன், மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட தொழில்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் தருநர்கள், உள்நாட்டு வெளிநாட்டு தொழில் தேடுவோர் உயர்தர, பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொழில் சந்தை வெற்றியளித்ததாக தொழில் தரு நிறுவனங்களும் தொழில் தேடுவோரும் தெரிவித்தனர். இந்த தொழில் சந்தை நிகழ்வு இளைஞர் யுவதிகளுக்கான சிறுவர் நிதியத்தின் நிதி அனுசரணையோடு இடம்பெற்றது.   

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025