தேங்காய், தேங்காய் எண்ணெயின் விலை உயரும் அபாயம்
price
coconut
coconut oil
Ranjith Vithanage
increace
By Vanan
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை உயரும் அபாயம் உள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவரான ரஞ்சித் விதானகே (Ranjith Vithanage) கூறியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்த பதிவை இட்டுள்ளார்.
வருடாந்த தேங்காய் அறுவடையுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மொத்த தேங்காய் பற்றாக்குறை 1.9 பில்லியன் ஆகும்.
எனவே, அரசாங்கம் இந்த 1.9 பில்லியன் தேங்காய் தட்டுப்பாட்டைச் சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும்.
இல்லாதுவிட்டால், உள்ளூர் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் மேலும் உயரும் அபாயம் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்