கொழும்பை வந்தடைந்த பிரமாண்ட கப்பல்
Colombo
Sri Lanka
Ship
By pavan
உலகின் பிரமாண்ட கப்பல்களில் ஒன்றான ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மார்ஷல் தீவுகள் கொடியுடனான இந்தக் கப்பலில் அமெரிக்க, கனேடிய மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று வருகை தந்துள்ளது.
கப்பல் வருகை
மாலைத்தீவில் இருந்து 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிவேரா சொகுசு பயணிகள் கப்பல் நாளைய தினம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் அதன்பின்னர் தாய்லாந்தின் புக்கெட் துறைமுகத்துக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்