நானுஓயாவில் கோர விபத்து : இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு
நுவரெலியா - நானுஓயாவில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொழில் நிமித்தம் நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுநாயக்கவிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த வான் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்து தொடர்பில் 42 வயதான வானின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |