அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்...யாழில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவணி
விதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழில் விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
அதன்படி, இன்று (09) மு.ப 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக காங்கேசந்துறை வீதி சத்திரச் சந்தி வரை இந்த வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.
வீதியில் காணப்படும் இடர்பாடுகளுடைய இடங்களை அடையாளங்காணல், வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகன நடைமுறைகளைப் பின்பற்றல், பரிசோதனை போன்ற செயற்பாடுகள் இந்த நிகழ்வில் நடைபெற்றன.
விழிப்புணர்வு நிகழ்வு
இன்று இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வினை தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளில் நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர், வடக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், மோட்டார் வாகன பரீட்சகர்கள், அதிகாரிகள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், போக்குவரத்து காவல்துறையினர், வைத்தியர்கள், மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |