மோசமான வானிலை : மூடப்பட்டன பல வீதிகள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள பல வீதிகள் வாகனப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக, கொழும்பு-கண்டி வீதியின் கடுங்கன்னாவ பிரிவில் இன்று பிற்பகல் முதல் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று RDA பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அனுராதா ஹெட்டியாராச்சி கூறினார்.
தற்போது மூடப்பட்டுள்ள வீதிகள்:
கொழும்பு-கண்டி வீதியின் கடுகன்னாவ பகுதி (95 கிமீ முதல் 99 கிமீ வரை)
அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதி (66 கிமீ பிரிவு)
நாவலப்பிட்டி - கினிகத்தேன வீதி 4/2 கல்வெட்டுக்கு அருகில்
அவிசாவளை - ஹட்டன் - நுவரெலியா வீதி (32 கிமீ பிரிவு)
தண்டகல-பாலம்பிட்டிய-டோலஸ்பாகே வீதி (6 கி.மீ பிரிவு)
மாவனல்லை-ஹெம்மாதகம-கம்பொல வீதி (19 கிமீ முதல் 21 கிமீ வரை)
யட்டியாந்தோட்டை-பூனாகலை வீதி மீனகல பிரதேசத்திற்கு அருகில் (21 கிமீ பிரிவு)
தெதுகல - தலம்பிட்டிய - டோலஸ்பாகே வீதி (6 கிமீ பிரிவு)
எனவே வானதாரிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |