பல்பொருள் அங்காடிக்குள் கைவரிசை காட்டிய திருடன்!
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dharu
ஹொரணை-பாணந்துறை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் பிரவேசித்த நபரொருவர் சுமார் ஒரு இலட்சத்து 50,000 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களுக்குள் ஏராளமான சிகரெட்டுகள் மற்றும் பால் மா பொதிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கடையின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக அங்கிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்வதற்கான விசாரணை
சந்தேக நபர் கடைக்குள் நுழைந்து பொருட்களை கொள்ளையிடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹொரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்