காபூல் விமான நிலையம் மீது இன்று ஏவுகணைத் தாக்குதல்!
காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து இன்று IS-K தீவிரவாதிகள் என்று நம்பப்படுகின்றவர்கள் மறுபடியும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.
அப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து 5 ஏவுகணைத் தாக்குதல்கள் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாகவும், தங்களது C-RAM defense system எறிகணை எதிர்ப்பு வலைப்பின்னல் அந்த ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
காபூல் விமாநிலையத்தில் அமெரிக்கப் படைகள் மிகப் பெரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கடந்த வாரம் தற்கொலைத் தாக்குல் மேற்கொள்ளப்பட்ட நுற்றிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் குண்டுகள் கொருத்தப்பட்ட கார் மூலம் தாக்குதல் நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அமெரிக்கப் படையினர் ‘ட்ரோன்’ தாக்குதல் மூலம் அதனை முறியடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் விமான நிலையத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
