‘குழந்தை மனசுக்காரன்’ ரோகித் சர்மா: வைரலாகும் காணொளி
மும்பை அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மாவின் காணொளி வைரலாகி வரும் நிலையில் அவரை குழந்தை மனசுக்காரன் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அசத்தியது. இதில் சதமடித்து அசத்தினார் ரோகித்.
ரி 20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் தலைவராக
36 வயதான ரோகித் சர்மா ரி 20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் தலைவராக செயல்படுவார்.
இந்த நிலையில் இன்றைய(18) பஞ்சாப் அணியுடனான போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ரோகித் சர்மா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது துடுப்பு மட்டைக்கு ஆசையாக ஸ்டிக்கர் ஒட்டும் காணொளியை வெளியிட்டுளார்.
காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி
அந்த காணொளியில், "சிகிச்சை” எனத் தலைப்பிட்டுள்ளார்.
இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ரோகித்தை ‘குழந்தை மனசுக்காரன்’ என புகழ்ந்து வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |