ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ரோகித் சர்மா…!
ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா(rohit sharma) தெரிவித்துள்ளார்.
டுபாயில்(dubai) நடைபெற்ற சம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலுமு் தெரிவிக்கையில்,
ஆதரவளித்த ஒவ்வொருவரையும் பாராட்ட விரும்புகிறேன்
எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களுடைய சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், கூடியிருக்கும் கூட்டம் இதனை எங்களுடைய சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது. எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும்.
தொடர் முழுவதும் உண்மையில் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடினோம். நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணியின் பலம் என்ன என அறிந்து செயல்பட்டனர். நீங்கள் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சிக்கும்போது அணியின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவை.
ஓய்வு என்ற பேச்சுக்கு இடமில்லை
அணியினர் என்னுடன் இருந்தனர். நான் மனதளவில் தெளிவாக இருந்தேன் என்பதே முக்கியம் வாய்ந்த விடயம்.
எதிர்கால திட்டங்கள் இல்லை. என்ன நடந்தாலும் அது தொடரும். நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்