மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித் சர்மா : வாங்க போட்டி போடும் அணிகள்
எதிர்வரும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா(rohit sharma) வெளியேற உள்ளதாகவும், அவரை ஏனைய அணிகள் ரூ.20 கோடிக்கு வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்(mumbai indians) அணியின் தலைவராக இருந்த ரோகித் சர்மா, அவ்வணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்தார். இந்த நிலையில், கடந்த ஐபிஎல்லின்போது மும்பை இந்தியன்ஸ் அணி தலைவராக ஹர்திக் பாண்டியா(Hardik Pandya) நியமிக்கப்பட்டார்.
போட்டி போடும் அணிகள்
இந்த நிலையில் மும்பை அணியிலிருந்து வெளியேற தயாராகும் ரோகித் சர்மாவை டெல்லி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் வாங்க தயாராக இருக்கின்றன.
2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தின்போது எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலம் எடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ அணியின் உரிமையாளர் தீவிரம்
குறிப்பாக, லக்னோ அணியின் உரிமையாளர் ரோகித் சர்மாவை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக உள்ளார். தவிர, ஆர்சிபி அணியின் தலைவர் டூ பிளசிஸ்-க்கு வயதாகிவிட்ட காரணத்தால் அவருக்குப் பதில் ரோகித் சர்மாவை வாங்கவும் அந்த அணி முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், கோலி - ரோகித் இணை சிறப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல் ஷிகர் தவானும் ஓய்வை அறிவித்திருப்பதால், பஞ்சாப் அணிக்காக ரோகித் சர்மாவை வாங்கும் நிலையில் அவ்வணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா இருப்பதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |