தலைமறைவான ரோஹிதவின் மகள் மற்றும் மருமகன்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடையை மத்துகம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவானது, வாலானை ஊழல் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளின் பேரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
.முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனை கைது செய்ய பாணந்துறை வாலானை ஊழல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
சந்தேகநபர்கள் அவர்களது அனைத்து குடியிருப்புகளிலிருந்தும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக பகுதிகளாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள லேண்ட் குரூசர் ஜீப்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்ற குற்றச்சாட்டில் சந்தேக நபரையும் அவரது கணவரையும் கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ரோஹித அபேகுணவர்தன மீதும் விசாரணை
துறைமுக அமைச்சராக இருந்தபோது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தேக நபரின் தந்தை ரோஹித அபேகுணவர்தன இந்த சட்டவிரோத செயல்முறையை மேற்கொண்டாரா என்பதையும் விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப்பைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (19) மதுகம நகரில் பாணந்துறை வாலானை ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ஜீப்புடன் கைது செய்யப்பட்டார்.
இந்த ஜீப், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, போலி எண்களைப் பயன்படுத்தி மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது கைது மற்றும் விசாரணையின் போது தெரியவந்தது.
மேலதிக விசாரணை
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகத்துக்குரிய ஜீப் ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடமிருந்து பெறப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் விதான கூறியுள்ளார்.
இந்நிலையில், அது தொடர்பான பரிவர்த்தனையின் புகைப்படங்களை கூட ஜெகத் விதான ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.
அதனைதொடர்ந்து, வாலனை ஊழல் தடுப்புப் பணியகத்தின் பொறுப்பதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக களுத்துறையில் உள்ள ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்குச் சொந்தமான இரண்டு வீடுகளை ஆய்வு செய்ததையடுத்து, அந்த நேரத்தில் அவர்கள் ஏற்கனவே தங்கள் வீடுகளை கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
அத்தோடு, சந்தேகநபர்களின் தொலைப்பேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், சந்தேகநபர்களை கைது செய்யவதற்கான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
