அமெரிக்க வரி விதிப்பு: மாற்று வழி நோக்கி நகர்வெடுக்கும் இலங்கை
இலங்கை ஏற்றுமதிகளுக்கான 30% அமெரிக்க இறக்குமதி வரியை குறைக்கத் தூண்டும் வகையில், அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதை இலங்கை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதிகளை அதிகரித்து வர்த்தக சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் WTI கச்சா எண்ணெய் கொள்முதல் சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
வரிச் சலுகை
இது, இலங்கை அமெரிக்காவுடன் மேற்கொண்டு வரும் வரிச் சலுகை பேச்சுவார்த்தைகளில் நல்ல ஆதிக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
