நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் காவல்துறையில் சரண்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Rohitha Abeygunawardana
Sri Lanka Politician
By Thulsi
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் (Rohitha Abeygunawardena) மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அவர் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார்.
வெளிநாட்டு பயணத்தடை
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் தொடர்பான வழக்கில் அவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.
இந்த வழக்கில் முன்னதாக அவரது கணவரும் அண்மையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
இந்த வழக்கில் குறித்த இருவருக்கும் மத்துகம நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்