ரொனால்டோவிற்கு உற்சாக வரவேற்பு - நாடு முழுதும் ஹாலா ரொனால்டோ பதாகைகள்
சவூதி அரேபியாவை சேர்ந்த அல் நஸ்ர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் சர்வதேச கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்நாட்டிற்கு சென்று இருக்கும் நிலையில் அவருக்கு அரபு மக்கள் மற்றும் அணி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அல் நஸ்ர் அணியின் மஞ்சள் நிற சீருடை அணிந்த சிறுவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
போர்த்துகலை சேர்ந்த சர்வதேச கால்பந்து ஜாம்பவானான ரொனால்டோ பிரிட்டனின் மான்செஸ்டர் யுனைட்டேன் அணியில் இருந்து விலகியதை தொடர்ந்து அண்மையில் சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் அணியில் விளையாடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
4,400 கோடிக்கு ஒப்பந்தம்
65 ஆண்டுகள் பழமையான சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் அணிக்காக 2025 ஆம் ஆண்டு வரை விளையாட ரூ.4,400 கோடிக்கு ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அல் நஸ்ர் அணி சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள மெர்சூல் பூங்கா மைதானத்தில் ரொனால்டோவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணியளவில் நடத்துகிறது.
இதற்காக ரொனால்டோ நேற்றிரவு சவூதி அரேபியாவுக்கு வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
உச்ச நட்சத்திரம்
அவரை ரியாத் விமான நிலையத்தில் அணி நிர்வாகத்தினர், கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பல ஆண்டுகளால சவூதி அரேபியாவில் லீக் போட்டிகள் நடந்து வந்தாலும், ரொனால்டோவே அதில் விளையாடும் உச்ச நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.
தனது உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் வந்த அவரை வரவேற்று ரியாத் நகரம் முழுவதும் "ஹாலா ரொனால்டோ" என டிஜிட்டல் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
ஏராளமான அரபு சிறுவர்கள் அல் நஸ்ர் அணியின் ஆடையை அணிந்து அவரை வரவேற்றனர். இவ்வளவு தொகை கொடுத்து ரொனால்டோவை அல் நஸ்ர் அணி வாங்க முக்கிய காரணம் அவரது வருகையால் அணிக்கு கிடைக்கும் விளம்பரம் மற்றும் விளம்பர தொகை உயர்வும்தான்.
73 லட்சம்
அத்துடன் அந்த அணிக்கான ரசிகர் வட்டமும் அதிகரிக்கும். பிறநாடுகளில் பலரால் அறியப்படாத அணியாக இருந்த அல் நஸ்ர் ஒரே நாளில் உலக மக்கள் மத்தியில் புகழ்பெற்று உள்ளது.
ரொனால்டோ அல் நஸ்ர் அணியில் இணையும் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அவர் அல் நஸ்ர் அணியின் ஆடையுடன் நிற்கும் படத்தை பகிர்ந்து தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அணி நிர்வாகம் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது.
அடுத்த நிமிடமே பின்தொடர்பாளர்கள் (followers) எண்ணிக்கை உயரத் தொடங்கி 7.3 மில்லியன், அதாவது 73 லட்சத்தை தொட்டுள்ளது.
نجـد العُظمـى ??
— نادي النصر السعودي (@AlNassrFC) January 2, 2023
تستقبل معشوق الجماهير حول العالم ?
لاعب نادي #النصر كريستيانو رونالدو ?
يصــل الرياض ?#HalaRonaldo ? pic.twitter.com/V3rmp88IWW
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
