கடைசி நிமிடத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ - இறுதி வரை பரபரப்பு (காணொளி)
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டியில் இறுதி நேரத்தில் ரொனால்டோவின் செயற்பாட்டால் தோல்வியடையும் நிலையில் இருந்த அல் நஸர் அணி தப்பிக்கொண்டது.
சவுதி அரேபியாவின் பிரின்ஸ் அப்துல்லா பின் ஜாலவி மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் - அல் படேஹ் அணிகள் மோதின.
அல் நஸர் மற்றும் அல் படேஹ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி 2 -2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ரொனால்டோவின் செயற்பாடு
பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியின் 12வது நிமிடத்திலேயே அல் படேஹ் அணி வீரர் கிறிஸ்டியன் டெல்லோ கோல் அடித்து அல் நஸர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல் நஸரின் தலிஸ்கா 42வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. அதன் பின்னர் இரண்டாம் பாதி தொடங்கியது.
🎥 هدف النصر
— دوري روشن السعودي (@SPL) February 3, 2023
⚽️ كريستيانو رونالدو
#️⃣ #الفتح_النصر pic.twitter.com/WSxEWT4iOm
ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் சோபியான்னே பென்டெபிகா கோல் அடித்தார். 90 நிமிடங்கள் வரை அல் நஸரால் கோல் அடிக்க முடியாததால் ரொனால்டோ ரசிகர்கள் தோல்வி பயத்தில் இருந்தனர்.
ஆனால் 90+3வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ அதனை கோல் ஆக மாற்றினார்.
இதன்மூலம் தோல்வியில் இருந்து தப்பிய அல் நஸர் போட்டியை சமநிலை செய்தது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்